பேரிடர் அபாய தகவல் தொடர்புக்கான முதன்மை நிறுவனங்கள்

பல்வேறு வகையான பேரிடர் முன்னெச்சரிக்கைக் குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் இந்திய அரசின் முதன்மையான துறைகள் கீழே காணலாம்.

வரிசை எண் பேரிடர்கள் துறைகள்
1 புயல் மற்றும் நீரியல் வானிலை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)
2 பூகம்பம் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)
3 வெள்ளம் மத்திய நீர் ஆணையம்
4 வறட்சி வேளாண் அமைச்சகம்
5 நிலச்சரிவுகள் இந்திய புவியியல் ஆய்வகம்
6 சுனாமி இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS)

மேற்கூறிய மத்திய அரசின் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை பணியாற்றும். இந்த நிறுவனம் மற்ற அனைத்து துறைகள் மற்றும் முகமைகளுடன் இணைந்து பேரிடர்கள் குறித்த தகவல்களை தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் / துறைகளுக்கும் பரிமாற்றம் செய்யும். மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் பேரிடர் மேலாண்மைக் குறித்த முன்னெச்சரிக்கைகளுக்கான வழிமுறைகளை தயார் செய்யும்.