> > தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு மையம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு மையம்

இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது, தேசிய, சர்வதேச அளவிலான அரசு சாரா அமைப்புகள் மற்றும் அயல்நாட்டுப் பிரஜைகள் போன்ற ஏராளமனோர் நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிவாரணம் மிகவும் வெளிப்படையான முறையில் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். செய்வதற்காக பல அரசு சாரா நிறுவனங்களோடு ஒருங்கிணைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் மற்றும் மாவட்டங்களில் நிறுவப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மையங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் உதவியை நாடுபவர்களின் தளம் தேவைப்படும் சேவைகளை வழங்கும்.

  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களைத் திரட்டுவதிலும், பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் துவங்குவதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடித்தள மக்களுக்கு பேரிடர் அபாயம் மற்றும் பாதிப்புகள் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர் கால முன்தயார்நிலையை மேம்படுத்தவும், பேரிடரை தணிக்கவும் மற்றும் பங்குதாரர்களின் அவசரகால சேவை திறன்களை மேம்படுத்தவும் பங்குதாரர் குழுக்களின் திறனை வலுப்படுத்துவதற்கான தகுந்த உத்திகளைத் தொடங்கவும்.
  • காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு பற்றிய வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள நிவர்த்தி செய்வதில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும், பிற நாடுகளில் பின்பற்றப்படும் நல்ல நடைமுறைகளின் அடிப்படையில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதிலும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்.
  • பேரிடர் அபாயம் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்ளவதற்கான நடைமுறை மற்றும் புதுமையான அணுகுமுறைகளைச் செயல்படுத்துவதற்கும், பல்வேறு அரசாங்கத் திட்டங்களைத் திறம்பட ஒருங்கிணைத்து, மாற்றியமைப்பதில் தேவையான ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி ஆதாரங்களை அரசு சாரா நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு மூலம் பெற்று தருவதற்கும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மையம் பயனுள்ளதாக இருக்கும்.

 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்