RIMES

தமிழ்நாடு அரசு பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012-2017), தீவிர வானிலை/காலநிலை நிகழ்வுகளுக்கு மாநிலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு , வானிலை மற்றும் காலநிலை தொடர்பான அபாயங்களைக் குறைப்பதற்கும், திட்டத்தின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் RIMES நிறுவனத்துடன் இணைத்து அபாய காலநிலை இடர் மேலாண்மை (CRM ) கட்டமைப்பை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது . RIMES உடன் இணைந்து "தமிழ்நாடு பன்முக அபாய சாத்தியமான தாக்க மதிப்பீடு, எச்சரிக்கை, அவசரகால பதில் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு (TN-SMART)" என்னும் பேரிடர் மேலாண்மை செயலியை உருவாக்க தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. TNSMART மேம்பாடு மற்றும் துரித செயல்பாட்டிற்காக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் RIMES நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது . இதன் மூலம் பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் அறிவியல் அடிப்படையிலான முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் தகவல்களை வழங்குவதற்கும், TNSMART என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது . இச்செயலி பேரிடர்கள் போது மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் மேலாண்மை செய்யவும் பேரழிவு அபாயங்களைக் குறைப்பதற்கும் திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பதில் பயனாளர்களுக்கு உதவி செய்யும்

 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்