> > பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நெறிமுறை

பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நெறிமுறை

இயற்கைப் பேரிடரின் போது மக்கள் மற்றும் அவர்களது உடமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. மீட்பு மற்றும் நிவாரண பணிகளின் தன்மை இயற்கை பேரிடர்களின் அளவினைப் பொறுத்து அமைகிறது. இயற்கை பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு, சமூகம், மக்கள் மற்றும் இதர தொடர்புடைய துறைகளின் பங்களிப்பு அத்தியாவசியமாகிறது. பேரிடர்களின் போது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மூலம் தொடர்புடைய முக்கிய துறைகள் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நெறிமுறையானது பேரிடர் காலங்களில் அரசு துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து ஒரு ஒழுங்குடன் சுயமாக செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இதன் மூலம் பேரிடர் மேலாண்மையில் அரசுத் துறைகளை வலுப்படுத்துவதும் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளை நிலைப்படுத்துவதும் எளிதாகின்றது. பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நெறிமுறைகளின் படி, அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் பேரிடர் மேலாண்மையில் ஒட்டுமொத்த பொறுப்பு அலுவலராகவும், அவருக்கு உதவியாக அரசு செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் ஆகியோர் பேரிடர் மேலாண்மை அலுவலராகவும், இயக்குநர், பேரிடர் மேலாண்மை அவர்கள் துணை பேரிடர் மேலாண்மை அலுவலராகவும் செயல்படுவர். இவர்களது வழிகாட்டுதல்களின் பேரில், அனைத்து தொடர்புடைய துறைகளும் இயங்கும். மாவட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை அலுவலராக செயல்படுவார்கள். மீட்பு மற்றும் நிவாரண செயல்முறையின் கீழ் பேரிடர் மேலாண்மை அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள், நியமிக்கப்பட்ட அலுவலர்கள் ஆகியவற்றை அரசு அறிவிக்க உள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட ஒத்திகைப் பயிற்சிகள் மூலம் மீட்பு மற்றும் நிவாரண செயல்முறையின் உபயோகம் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எளிதில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005

வரைபடம்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்