அடுத்து ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு.
12.12.2024 முதல் 13.12.2024 வரை காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் காற்றுடன் கூடிய வானிலை, தமிழகக்கடற்கரையோரங்களிலும், மன்னார் வளைகுடா கொமோரின் பகுதியிலும் நிலவும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
12.12.24 பிச்சாட்டூர் நீர்தேக்கத்திலிருந்து நீர் ஆரணி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்-TNSDMA
திருவள்ளூர் இருந்து விழுப்புரம் வரை கடல் சீற்றம் 8 அடி முதல் 12 அடி உயரம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கடலுக்கு அருகாமையில் செல்வதை கட்டாயமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
மஞ்சள் - கனமழை எச்சரிக்கை மாவட்டங்கள் - நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி.
சிவப்பு – அதிக கனமழை எச்சரிக்கை மாவட்டங்கள் -தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆரஞ்சு - மிக கனமழை எச்சரிக்கை மாவட்டங்கள் -திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி.
குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழகக் கடலோரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
சாத்தனூர் அணையில் நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்- TNSDMA
12.12.24 பூண்டி நீர்தேக்கத்திலிருந்து நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்-TNSDMA
தொடர்பு கொள்ளவும்
எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005
வரைபடம்