UNICEF

UNICEF மற்றும் TNDRRA நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பேரிடர் அபாயங்களைத் தணிப்பதற்காக இணைந்து செயல்படுத்தும் கூட்டு செயல்பாடுகள்:

அனைத்துவகை பேரிடர்களை எதிர் கொள்வதற்கும் பேரிடர்கள் போது மனிதாபிமான உதவிகள் வழங்குவதிலும் தமிழ்நாட்டிற்கு யுனிசெஃ ப் உறுதுணையாக உள்ளது. இதன் பகுதியாக 2023 -2024 ஆம் ஆண்டிற்கான பணித் திட்டம் யுனிசெஃ ப் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை இடையே கையொப்பமாகியுள்ளது. பேரிடர் அபாய மேலாண்மை, திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள், அபாய தகவலின் பேரில் திட்டமிடல் மற்றும் பெண்கள் குழந்தைகளை மீட்பதில் சிறப்பு கவனம் ஆகியவற்றிக்கான தொழில் நுட்ப உதவியினை யுனிசெஃ ப் நிறுவனம் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்கு வழங்கி வருகிறது. மேலும்

1. மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு (கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிற மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்) நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உள்ளடக்கிய மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிப்பதில் உதவுதல்.

2. பல்வேறு பேரிடர் அபாயம் தொடர்பான 'விழிப்புணர்வு தகவல் கல்வி தொடர்பு சாதனங்களை (IEC materials)' தயாரிப்பதில் தொழில்நுட்ப ஆதரவை அளித்தால்.

3. பேரிடர் அபாய குறைப்பில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பை பலப்படுத்துதல் மற்றும் பேரிடர்களின் போது மாநில அவசரகால செயல்பட்டு மையம், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் ஆகியவற்றில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பினை ஒருங்கிணைத்தல்.

4. கிராமப்புறங்களில் குழந்தைகளை மையமாக கொண்ட பேரிடர் அபாய குறைப்புத் திட்டம் மற்றும் அபாயம் அறிந்த திட்டமிடல் ஆகிய பயிற்சிகளை வழங்கும் மாநில பயிற்சி நிறுவனங்களின் திறன் மேம்பாடு.

5.சமூகத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பேரிடர் அபயக்குறைப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான முக்கிய பணிகளையும் சீரமைத்தல்.

6. பேரிடரை எதிர்கொள்ளும் ஆயத்த அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும் சமூக பின்னூட்ட வழிமுறைகள் மற்றும் நிவாரண முகாம்களின் மேலாண்மை.

7. விரிவான 'பள்ளி பாதுகாப்பு செயல்படுகளை' உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துதல்.

 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்