அறிமுகம்

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசால், அரசாணை எண். 323 வருவாய் NCI (2)] துறை, நாள்: 08.07.2003-ன் மூலமாக, பேரிடர் நிகழ்வின் போது தணிப்பு மற்றும் ஆயத்த நிலை ஏற்பாடு போன்ற பணிகளை ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்த தலைமைச் செயலாளர் அவர்களை தலைவராக கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

மாநில, மாவட்ட மற்றும் ஊரக அளவில் பேரிடர் மேலாண்மை பணிகளை திறம்பட மேற்கொள்ள வரையறுக்கப்பட்ட அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் குறித்து பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 (மத்திய அரசு சட்டம் 53), வழங்குகிறது. இந்த சட்டத்தின் பிரிவு 14(2)-ன் படி மாநில அளவில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு:-

  • மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், பதவி வழி உறுப்பினர்,
  • அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி உறுப்பினர்,
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்,
  • உள் துறை செயலாளர்,
  • நிதித் துறை செயலாளர்,
  • மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்,
  • சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையத்தின் இயக்குநர்,
  • சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கட்டட பொறியியல் துறையின் தலைவர்,

இவ்வாணையமானது பல்வகை பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கை உருவாக்கத்திற்கு வழிகாட்டுதல், மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து முக்கிய செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

 

 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005

வரைபடம்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்

  VISITORS STATS

Today

246

Overall

12235