தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டம்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம், மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைக்கான வரையறுக்கப்பட்ட நெறிமுறையாக உள்ளது. பேரிடர் தயார்நிலை, தடுப்பு, தணிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கான வழிகாட்டுதல்களை மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் வழங்குகிறது. இத்திட்டம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தங்கள் துறையின் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர். பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 பிரிவு 23(1)-ன் படி தமிழ்நாடு அரசு, 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. பேரிடர் தவிர்ப்பு, தணிப்பு, ஆயத்தம், மீட்பு, நிவாரணம், சீரமைப்பு, மறுவாழ்வு, திறன் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகள் இத்திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான பரிந்துரைகளும் இத்திட்டத்தில் உள்ளது. மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டமானது மாநில முழுமைக்குமான ஒரு கட்டமைப்பு. இது ஒவ்வொரு மாவட்டம் மற்றும் துறைகளின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்டு அவசர காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டங்கள், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்படுகிறது. அவசர காலத்தில் பல்வேறு துறைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களின் இருப்பு இத்திட்டத்தில் பட்டியலிடப்படும். மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் துறைகளின் பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் ஒருங்கிணைந்து மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டமாக உருவெடுக்கும் .

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்