தேசிய பேரிடர் தணிப்பு நிதி
தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்புற வெள்ள அபாயக் குறைப்பு
15-வது நிதி குழு பரிந்துரையின்படி, நாட்டில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட 7 நகரங்களில் நகர்புற வெள்ள அபாயத்தினை குறைக்க ரூ.2,500 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.100 கோடி வீதம் 2021-26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து வறட்சியால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு ஊக்க உதவி
தமிழ்நாட்டில் வறட்சி தணிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.20 கோடி வீதம் 2021-26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தணித்தல்:
நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பத்து மலைசார்ந்த மாநிலங்களில் இடர் தணிப்பதற்காக ரூ.750 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நிலவி வரும் நிலச்சரிவு அபாயத்தை தணிக்கும் வண்ணம் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு அனுப்பப்படும்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தீயணைப்பு துறையின் விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கம்
தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நாட்டில் உள்ள தீயணைப்பு படையினரின் திறன்மேம்பாடு மற்றும் நவீன மயமாக்க ரூ.5000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினை நவீன மயமாக்க ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற முன்மொழிவுகள் தயாரிக்கப்படும்.