> > வானிலை கண்காணிப்பு அமைப்பு

வானிலை கண்காணிப்பு அமைப்பு

தானியங்கி மழைமானி / தானியங்கி வானிலை நிலையம்

தமிழ்நாடு அரசு ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் 1400 தானியங்கி மழைமானி (ARG) மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையம் (AWS) அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தானியங்கி மழைமானி / தானியங்கி வானிலை நிலையத்திலிருந்து பெறப்படும் மழைபொழிவின் தரவுகளின் அடிப்படையில் அணைகளின் நீர்வரத்தை மதிப்பிட முடியும். இது பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். அதிக மழைப்பொழிவு காரணமாக ஏற்படும் பயிர் சேதங்களை துல்லியமாக மதிப்பிடவும், நதிப் படுகை வாரியாகவும், விவசாய காலநிலை மண்டல அடிப்படையிலும் மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கும் குறிப்பிட்ட வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை அளிக்க இயலும்.

ரேடார்

வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்த, இரண்டு சி-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார்கள், வானிலை பலூன்கள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் நிறுவுதல் ஆகிய பணிகளுக்காக ரூ.56.03 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்கண்ட ரேடார்களை இராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் நிறுவ முடிவு செய்யப்பட்டு, ரேடார்களை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம்

மிகத் துல்லியமான மீசோ அளவிலான வானிலை முன்னறிவிப்பு மற்றும் அறிவுப் பகிர்வை உருவாக்க, அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் கட்டுபாட்டில் உள்ள உயர் ஆற்றல் கணினி வசதியைப் பயன்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேவையான இடங்களில் பொதுமக்களுக்கு மின்னல் தொடர்பான எச்சரிக்கைகளை அனுப்புவதற்காக, புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005

வரைபடம்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்

  VISITORS STATS

Today

2139

Overall

7350