> > பேரிடர் மதிப்பீடு & வரைபட படுத்துதல்

பேரிடர் மதிப்பீடு மற்றும் வரைபடபடுத்துதல்

அபாய பாதிப்பு மற்றும் அபாய மதிப்பீடு

பேரிடர் அபாயத்தின் அனைத்து பரிமாணங்கள் மற்றும் தாக்கங்கள் இடையே உள்ள தொடர்பினை புரிந்து கொள்வது இதனடிப்படை ஆகும். இந்த அபாய மதிப்பீடு மாநில, மாவட்ட அளவில் / ஆற்றுப் படுகைகள் / நீர்நிலை மட்டங்கள் பல்வேறு பேரிடர் பாதிப்புகளை மதிப்பீடு செய்து பேரிடர் வரைபடத்துடன் தயாரிக்கப்படுகிறது. புவிசார் இடவியல் பகுப்பாய்வு, பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை, சாத்தியமான தாக்கங்கள் ஆகிய பல்வேறு அளவுகோல்கள் மூலம் கணினி அணுகுமுறை, அல்லது இருப்பிடம் சார்ந்த உத்திகள் ஆகியவற்றின் மூலம் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான அவசியத்தை வெளிப்படுத்தும். பேரிடர் மதிப்பீடு குறித்த இவ்வாய்வு பல்வேறு வகையான வெள்ளங்கள் (தீடீர் வெள்ளம்), கடற்கரை வெள்ளம், நகர்ப்புற வெள்ளம், ஆற்றுப் படுகை வெள்ளம், வறட்சி, கடந்த காலங்கள் ஏற்பட்ட சூறாவளிகள், புயல் சீற்றம், நிலச்சரிவுகள், நிலநடுக்கத்தின் நில அதிர்வு நுண் மண்டலங்கள், வெப்ப அலைகள், மின்னல், பயிர்களில் வெள்ள நீர் தேக்கம், கடல் அரிப்பு, கடல் நீர் ஊடுருவல், இரசாயன உயிரியல் கதிரியக்கம் மற்றும் அணுக்கரு விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது பதிவேற்றப்படுகிறது. இதன் மூலம் தேவையான இடங்களில் ரேடார் மற்றும் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி மிக நுட்பமாக பகுப்பாய்வு செய்திட இயலும். இந்த ஆய்வுகள் தேசிய / மாநில அளவிலான அறிவியல், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

TNSMART

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் – பல்வேறு பேரிடர்களின் தீவிர தாக்கத்தினை முன் அறிந்து அவசர மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் திட்டம் தமிழ்நாட்டில், பல்வேறு பேரிடர்களின் தீவிர தாக்கத்தினை முன் அறிந்து அவசர மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் இணையவழி மற்றும் கைப்பேசி செயலி திட்டம் TNSMART எனப்படுகிறது. இச்செயலி ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னவிறிப்பு அமைப்புடன் இணைந்து (RIMES), உலக வங்கியின் நிதி உதவியுடன், பேரிடர் மேலாண்மைக்கு பணிக்கு பயன்படும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.
பேரிடர் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளில் தமிழ்நாட்டின் சிறந்த முன்னெடுப்பாக TNSMART செயலியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பித்துள்ளது. இந்த TNSMART செயலியின் மூலம் 4.7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயனடைந்துள்ளனர். இச்செயலியின் மூலம் பேரிடர் கால செய்தி மற்றும் புகார்களை அதிகாரிகளுக்கு அனுப்பவும், அவர்களது உதவியை கோரவும் இயலும். மேலும், இந்த மொபைல் செயலியின் மூலம் செய்தி, புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை அதிகாரிகளுக்கு அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் வழங்கப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு பாதிக்கப்படும் பகுதியிலிருந்து பொதுமக்களை மீட்க, நிவாரண மையங்கள் அல்லது பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க பெரிதும் பயன்படுகிறது.

நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றம் இடம்சார் முடிவுகள் மேற்கொள்ள உதவும் அமைப்பு (RTFF & SDSS)

தமிழ்நாடு அரசு, அடையாறு கூவம் ஆறு, கொசஸ்தலையாறு ஆறு மற்றும் கோவளம் ஆற்று பகுதிகளுக்கு நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடம்சார்ந்த முடிவு ஆதரவு அமைப்பு பற்றிய ஆய்வை உருவாக்கி வருகிறது. இந்த ஆய்வில், தானியங்கி வானிலை நிலையம், தானியங்கி மழை அளவீடுகள் மற்றும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் தரவு பெறும் தானியங்கி நீர் நிலை பதிவு செய்யும் கருவிகள் ஆகியவை அடங்கும். ஆற்றுப்பகைகளில் நீர்மட்டம் உயர்வது தொடர்பான தரவு உள்ளீடுகளின் அடிப்படையில் ஆற்றுரோரம் / ஓடையோர பகுதிகளில் வெள்ள ம் ஏற்படுவது குறித்து முனனெச்சரிக்கை தகவல் அளிக்க இயலும்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தரவுதளம் (SDEM)

தமிழ்நாடு மாநில அவசரநிலை மேலாண்மை தரவுதளம் என்பது அவசர நிலை மேலாண்மை செய்வதற்கான புவிசார் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இணைய வழி தரவுதளமாகும். இத்தரவுத்தளம் நிலப்பரப்பின் பயன்பாடு, புவியியல் தன்மை, வனப்பகுதி, கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு, டிஜிட்டல் மாதிர் ஆகிய தரவுகள் குறித்த விவரங்களை கொண்டுள்ளது.
இத்தரவுத்தளம், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளின்படி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உதவிடும் வகையில், தொலைவு, கருவிகள் போன்ற தரவுகள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், புயல், சுனாமி போன்ற நிகழ்வுகளினால் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்படும் கடல்சீற்றம் மற்றும் குறித்த தரவுகளடங்கிய மாதிரியினையும் இத்தளத்தில் கட்டமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பேரிடர் அவசர காலங்களில் பல்வேறு துறைகளின் அனைத்து புவிசார் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் இத்தரவு தளம் செயல்படும்.

I-Flows (சென்னை நகருக்கான அறிவுத்திறன் சார் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு)

I-Flows-Chennai எனப்படும் சென்னை மாநகருக்கான ஒருங்கிணைந்த கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு, வானிலை முன்னறிவிப்பு தரவுகள் ஆகிய தரவுகளை ஒருங்கிணைத்து, இணைய புவிசார் அடிப்படையிலான ஆதரவு அமைப்பாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தால் (NCCR) உருவாக்கப்பட்டது. நீர்நிலைத் தரவுகள், நீரியல் தரவுகள் மற்றும் ஹைட்ரோடைனமிக் தரவுகள், வானிலை முன்னறிவிப்பு, வார்டு நிலை தகவல், நிலப்பரப்பு - லிடார் டிஇஎம், ஹைட்ரோடைனமிக் மாடல் ஜியோ டேக்கிங் ஆகியவை வெள்ளத்தின் போது ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பாக செயல்படும் 6 தொகுதிகள் இதில் அடங்கும்.

ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பு (I-Flows) சென்னை மாநகரில் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு வகையான மழைப்பொழிவுகள் அதன் தீவிரம் குறித்த 864 வெள்ள மாதிரிகளின் அடிப்படையில் வார்டுகளில் வெள்ளம் ஏற்படும் நிலையை முன்கூட்டியே கணிக்க உதவுகிறது. தற்போது இவ்வமைப்பு 4 கிமீ தெளிவுத்திறனில் 3 நாட்களுக்கு முன்பு மழை பெய்வதை கணிக்கக் கூடிய தேசிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (NCMRWF) முன்னறிவிப்புத் தரவுகளைப் பயன்படுத்தி அதனடிப்படையில் வெள்ளப்பெருக்கை முன் கூட்டியே கணிக்கிறது.

புயல் சீற்றம் மாதிரி

புயல் சீற்றம் மாதிரியானது, புயல்கள் மற்றும் சுனாமிகளின் போது கடலோரப் பகுதியில் ஏற்படும் கடல் அலை சீற்றத்தின் உயரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தின் தீவிரம் ஆகியவற்றைக் கணிக்க உதவும் ஒரு இலக்கு அடிப்படையிலான மாதிரியாகும். நிகழ்நேர சூறாவளி அலை மாதிரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இக்களம் தமிழ்நாட்டின் கடற்பகுதி முழுமையையும் உள்ளடக்கியதாகும். மேலும் கடல் அலை சீற்றத்தின் மாதிரிகள் மற்றும் டிஜிட்டல் எலிவேஷன் மாதிரிகள் ஆகியவற்றின் கணிக்கப்பட்ட அலை உயரத்தின் அடிப்படையில் வெள்ளப் அளவு மற்றும் வெள்ளத்தின் தீவிரம் உள்ளடக்கிய வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன. வெள்ளத்தின் ஆழம் பின்னர் நிருவாக வரைபடங்களில் திட்டமிடப்பட்டு, மேலும் பகுப்பாய்வு மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதற்கு உதவுகிறது.

டைனமிக் இணைய அடிப்படையிலான கூட்டு இடர் அட்லஸ் மற்றும் முடிவு ஆதரவு அமைப்பு (WEB DCRA)

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தேசிய சூறாவளி இடர் தணிப்பு திட்டத்தின் (NCRMP) கீழ் இணைய அடிப்படையிலான டைனமிக் காம்போசிட் ரிஸ்க் அட்லஸ் - முடிவு ஆதரவு (WEB DCRA-DSS) கருவி உருவாக்கப்பட்டது. Web-DCRA & DSS பயன்பாடு நிகழ்நேர உள்ளீட்டுத் தரவை எடுக்கிறது, அதாவது சூறாவளி டிராக் விவரங்கள் மற்றும் IMD இலிருந்து மழைப்பொழிவு, மேலும் சூறாவளியின் நிகழ்நேர பகுப்பாய்வை உருவாக்குகிறது. நிகழ்தகவு இடர் மதிப்பீட்டு வரைபடங்கள் / தயாரிப்புகள் (நிகழ்தகவு ஆபத்து மாதிரியாக்கத்திற்கான சீரான சூழ்நிலை அடிப்படையிலான அணுகுமுறை) புயல் அபாயம் மற்றும் புயல் எழுச்சி வெள்ளம் / கடலோர வெள்ளம் பாதிப்பு வரைபடங்கள் ஆகியவற்றை சித்தரிக்கின்றன. இறுதியாக, பயன்பாடு பாதிக்கப்பட்ட மக்கள் தொகை மற்றும் சாத்தியமான இழப்பு மதிப்பீடுகளை வழங்குகிறது சூறாவளி காற்று, புயல் எழுச்சி மற்றும் சூறாவளி மழையால் தூண்டப்பட்ட வெள்ளம் மற்றும் நிகழ்நேர நிகழ்விற்கான அவற்றின் கூட்டு தாக்கம்.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாகும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது

தொடர்பு கொள்ளவும்

எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005

வரைபடம்

பதிப்புரிமை © 2024 TNSDMA. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைத்தவர் முத்து சாஃப்ட்லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்

  VISITORS STATS

Today

2247

Overall

7458