தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை

மாநில பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணை கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல் துறை ஆய்வாளர்களும் மற்றும் 70 காவல் துறையினர் ஒப்பந்த பணி அடிப்படையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், தேசீய பேரிடர் மீட்புப் படையினரின் ஆலோசனையின் மூலம் நேர்த்தியான பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியினை மாநில பேரிடர் மீட்புப்படையினருக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இப்படையினை மேம்படுத்துவதற்காக சிறப்பு காவல் படையிலிருந்து கடலோர மாவட்டங்களுக்கு 70 காவலர்கள் வீதம் மொத்தம் 2500 காவலர்கள் தேசீய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் போன்ற பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர்கள் அசட்டையான சூழலை சமாளிக்க தேசீய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பேரிடரின் போது பாதுகாப்பில் நுட்பமாக கையாள மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் செஞ்சிலுவை அமைப்பினரின் உதவியுடனும் சிறப்பு பயிற்சிகளான, தேடல், உடனடி மருத்துவம் மற்றும் முதலுதவி போன்ற பயிற்சிகளை முதல் பொறுப்பாளருக்கு மாவட்டவாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இயற்கை மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்படும் பேரிடர்களின் போது உடனடி பாதுகாப்பிற்காக தமிழக அரசு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை தேசீய மீட்பு படையினரின் வழிகாட்டுதலின்படி நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் படைக்கு தேவையான தரம் வாய்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கும், தேசீய பேரிடர் மீட்பு படையினர் மூலம் திறன்வளர்வித்தல் போன்றவற்றிற்கு செலவிடப்படும்.