பேரிடர் முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் தகவல் பரப்புதல் முறைகள்

2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பிறகு தமிழகம் நிகழ்கால நிலை மாற்றம் (real time) மற்றும் நில அதிர்வு குறித்த தகவல்களை பெறவும் பகிரவும் வசதிகளை உருவாக்குவதில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பேரிடர் பேரழிவினால் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு பேரிடர் அபாயம் குறித்த தகவல்களை நேரத்தில் தெரியப்படுத்த மாநில அவசர கட்டுபாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுபாட்டு மையத்திலிருந்து மாவட்ட அவசர கட்டுபாட்டு மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மீட்பு மற்றும் நிவாரணம் போன்ற பணிகளில் ஈடுபடும் முகமைகள் மற்றும் பிற பேரிடர் மேலாண்மை சார்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்ற சேவை இல்லாத காரணத்தினால் பேரிடர் அபாயம் குறித்த தகவல்களை குறித்த நேரத்தில் தொலைவில் உள்ள மற்றும் எளிதில் தொடர்பு கொள்ள இயலாத கிராமப்பகுதிகளில் சென்று சேர்க்க இயலாமல் போகின்றது.

ஆதலால், நவீன தொழில் நுட்பங்களுடன் முன்னெச்சரிக்கை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் 439 பேரிடர் அபாயம் குறித்த தகவல்களை பகிரும் அமைப்புகளை ஏற்படுத்தி அதற்கு DWAS-R என பெயரிடப்பட்டுள்ளது. DWAS-R அமைப்பு பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை குறித்த தகவல்களை தொடர்புகொள்ள இயலாத தொலை தூரப்பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 13 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை நிர்வகிக்க ஏதுவாக மத்திய கட்டுபாட்டு அறையான மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் மத்திய பேரிடர் புனரமைப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது DWAS-RC என்றழைக்கப்படுகின்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளின் தகவல்களை தரும் DWAS-DRC அமைப்பினை, அனைத்து DWAS-DRC அமைப்பின் ஒட்டு மொத்த தலைமையகமாக அமைத்திட முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வகை மாநில மத்திய புனரமைப்பு பிரிவு ஆளில்லா பேரிடர் அபாய தகவல் பரிமாற்ற சேவையை செய்யும் வகையில் உள்கட்டமைப்புடன் கூடிய தானியங்கி சோதனை அமைப்பாக செயல்படும். இந்த பிரிவின் மூலம் பேரிடர் காலங்களில் அபாய எச்சரிக்கையை தெரியப்படுத்த 1km சுற்றளவிற்கு கேட்க கூடிய ஒலிப்பானும், 700m சுற்றளவிற்கு குரல்வழி எச்சரிக்கையை கேட்க செய்யும் கருவி மற்றும் 1km தொலைவில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய சமிஞ்யை ஒளி செலுத்தும் கருவியும் உள்ளடக்கியுள்ளது. DWAS-C மாநில பேரிடர் புனரமைப்பு பிரிவு அல்லது DWAS-D மாவட்ட புனரமைப்பு பிரிவின் தகவல்களின் படி பேரிடர் முன்னெச்சரிக்கை தகவல்கள் தானியங்கி அமைப்பின் மூலம் பெறப்பட்டு மக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.