இடர் விவரங்கள்

சூறாவளி / கன மழை பாதிப்பு

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு, புயல், வெள்ளம் மற்றும் நில அதிர்வினால் ஏற்படும் சுனாமி போன்ற பேரிடர்களின் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலமாக ஆகியுள்ளது. மாநிலத்தில் சுமார் 8… பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் ஆறு சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது. இதில் 2 முதல் 3 கடுமையானவை. கிழக்கு கரையோரத்தில் சூறாவளி நடவடிக்கைகள் மேற்கு கடற்கரையைவிட மிகக் கடுமையானவை. மேலும் முக்கியமாக அக்டோபர் - டிசம்பரில் ஏற்படுவதை சொல்லலாம். சராசரியாக, வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகம் ஒன்று அல்லது இரண்டு சூறாவளி நிகழ்வுகளை எதிர்கொள்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் உருவாகி, பல நிலைகளில் தொடர் மழையினை பெய்விக்கின்றது. தாழ்வழுத்தம் / ஆழமான தாக்கங்கள் ஏற்படுவதால் பாதிப்புற்ற பகுதிகளில் வெள்ளம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மிகக் கடுமையான மழைப் பொழிவு நிகழ்வுகள், ஆற்றின் அமைப்புகள் மற்றும் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் தாங்கும் திறனைத் தாண்டி, இடையூறு விளைவிக்கும். சில புயல்கள் சமயத்தில் 140 கி.மீ. தொலைவுக்கு அப்பால் செல்வதுடன், மின் உள்கட்டமைப்பு உட்பட பொது உள்கட்டமைப்புகளை அழிப்பதோடு வீடுகள் மற்றும் விவசாய சொத்துக்கள் சேதம் மற்றும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும்.

வெள்ளம் பாதிப்பு

மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள்
  • நீரில் மூழ்கும் இடம் 5 அடிக்கு மேல் அல்லது அதற்கு மேல் ஆழமான பகுதிகள்.
  • மத்திய / மாநில நிவாரணப் படை உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் அவை பெரிய அளவிலான வெளியேற்றம் நடத்தப்பட்டது.
  • போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டு, அணுக முடியாத இடங்கள்.
  • உயிரிழப்பு அதிகளவு மக்கள் வெளியேற்றம் நடத்தப்பட்ட இடங்கள்.
அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள்

3 அடி முதல் 5 அடிவரை வெள்ள நீர் தேங்கிய பகுதிகள்

மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள்

2 அடி முதல் 3 அடி வரை வெள்ள நீர் தேங்கிய பகுதிகள்

குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகள்

2 அடிக்கும் குறைவான வெள்ள நீர் தேங்கிய பகுதிகள் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாய பகுதிகளாக இதுவரை மொத்தம் 4399 இடங்களை பதிவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 4 கூறுகளாக பிரிக்கப்பட்டு கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வ. எண். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் வகைப்பாடு அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை
1. மிக உயர்ந்த பாதிப்புக்குரிய பகுதிகள் 578
2. உயர் பாதிப்புக்குரிய பகுதிகள் 892
3. மிதமான பாதிப்புக்குரிய பகுதிகள் 578
4. குறைந்த பாதிப்புள்ள பகுதிகள் 1723
  மொத்தம் 4399

வரைபடத்தில் குறைந்தது ஒவ்வொரு குறுவட்டம் (ஊரகம்) / வார்டு (நகர்ப்புறம்)-க்கும் 3 பாதிப்பு பகுதிகள் என்ற வீதத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிப்பு பகுப்பாய்வு, வெள்ளப்பெருக்கின் ஆதாரம், தப்பிச்செல்வதற்கான வழிகள், நிவாரண மையங்கள், அவசரகால தொகுப்பு எண்கள், முதல்நிலை மீட்பாளர்களின் தகவல் இடம் பெற்று இருக்கும். இது பல்துறை மீட்பு குழுக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

கடலோர வலுவிழப்பு பகுதிகள்

13 கடலோர மாவட்டங்கள், 25 கடலோர வட்டங்கள் மற்றும் 561 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. கடலோர சுற்றுச்சூழல் தற்பொழுது மாசுபாடு, வண்டல்மண் சேருதல் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவை காரணமாக வெள்ளம், உப்புநீர் ஊடுருவல் மற்றும் புயல் சூழல்களிலிருந்து சிக்கல்களை எதிர்கொள்கிறது. வடக்கே கோரமண்டல கடற்கரையின் புலிக்காட் ஏரியிலிருந்து தெற்கே கோடியக்கரை வரை ஒரே நேர்கோட்டிலும் பின்னர் அதன் நீட்சியாக மன்னார் வளைகுடா மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்முனையான கன்னியாகுமாரி வரை நீள்கிறது. 2004 சுனாமி மற்றும் சூறாவளிகள் இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

வறட்சி பாதிப்பு

குறைந்த மழைப்பொழிவு மற்றும் பருவ மழை பொய்ப்பு காரணமாக தமிழகம் வறட்சி பாதிக்கக்கூடிய மாநிலமாக உள்ளது. வறட்சியானது உணவு உற்பத்தியிலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வறட்சி நிலவும் தர்மபுரி, மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வறட்சியால் பாதிக்கக்கூடிய மாவட்டங்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடிய வறட்சியால் தமிழ்நாடு வேளாண்மை பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவு

இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், மிகஅதிக நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். இந்திய அரசாங்கம் BMTPC உதவியுடன் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை வரையறுத்து வரைபடம் தயாரித்து வெளியிட்டுள்ளது. நீலகியில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அதிய மழைப் பொழிவு ஏற்படும் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படுகிறது. முக்கியமாக ரன்மெய்டி நிலச்சரிவு, க்ளென்மோர் நிலச்சரிவு, குன்னூர் நிலச்சரிவு, கரடிபள்ளம் நிலச்சரிவு, மேகமலை நிலச்சரிவு மற்றும் மரப்பாலம் மேலும் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர், திண்டுக்கல் (கொடைக்கானல் ஹில்ஸ்) மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களும் நிலச்சரிவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் ஆகும்.

அண்ணா பல்கலையின் தொலையுணர் மையத்தின் உதவியுடன், நீலகியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை ஆராய Geo Technical cell ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

நில அதிர்வு பாதிப்பு

தீபகற்ப இந்தியாவில் நில அதிர்வு பாதிப்புக்குள்ளாகக் கூடிய 13 இடங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இது கிழக்கிலிருந்து மேற்க்காக காவிரிப்பிளவு, திருக்கோவிலூர் - பாண்டிச்சேரி பிளவு, வைகை நதி பிளவு, வடத்தெற்காக செல்லும், குமரி - கோடியக்கரை பிளவு மற்றும் இராஜபட்டினம் மற்றும் தேவிப்பட்டினம் பிளவு பகுதிகள் நகர மயமான கோயம்புத்தூர், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. 200 ஆண்டுகால தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் தமிழகம் மிதமான நில அதிர்வுகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரை m >5.0 க்கும் குறைவான 12 நில அதிர்வுகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.

Seismic Zoning Map of Bureau of India-வால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தின் படி தமிழகத்தின் 73ரூ பரப்பு மண்டலம்-II, 27ரூ பரப்பு மண்டலம் III-லும் வருகிறது. மண்டலம்-II என்பது H.9-க்கும் குறைவானது. மண்டலம் III என்பது 6.9 வரையானது. தமிழகத்தின் கோயமுத்தூர், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மண்டலம் II-ன் கீழ் வருபவை. மாநில தலைநகரமான சென்னை மற்றும் முக்கிய மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலம்III-ன் கீழ் வருகின்றன.

தீ விபத்து மற்றும் வெடிபொருள்கள்

தமிழ்நாடு தீ விபத்துக்களால் பெரிதும் பாதிக்கக்கூடிய மாநிலம். தமிழகத்தின் சில பகுதிகள் அதி தீவிர தீ விபத்து பாதிப்பு பகுதிகள் ஆகும். சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அதிதீவிர தீ விபத்து பாதிப்பு பகுதிகளாகும். கடலூர், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகியவை உயர் தீ விபத்து ஆபத்து பகுதிகளில் வருகின்றன. இப்பகுப்பாய்வானது மக்களடர்த்தி, குடியிருப்பு கட்டுமான பகுதி மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.