புயல்

தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள் புயலினால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாகும். தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்கள் மிக அதிக மற்றும் அதிகமாக புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களாகும். பல புயல் சீற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சீற்றங்களே மிக அதிக பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக, இராமேஸ்வரம் புயல், நிசா புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா புயல் ஆகியன பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன. 2015ம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட வெள்ளமானது வரலாறு காணாத கன மழையினால் ஏற்பட்டது. மேலும் இவ்வெள்ளத்தினால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பிற்குள்ளாகின.

புயலின் போது உண்டாகும் பலத்த சூறாவளிக் காற்று, கடல்சீற்றம் மற்றும் கனமழை ஆகிறவற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடல் சீற்றத்தினால், கடல் நீர்மட்டம் உயரும் செயலானது புயல் காலங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான உயிர் இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. புயலின் போது ஏற்படும் பலத்த காற்றானது, கடல் மட்டத்தினை உயர்த்திட வழிவகுக்கும். இதன் காரணமாக, கடற்கரையை ஒட்டிள்ள வீடுகளுக்கு மிகுந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புயலின் போது ஏற்படும் பலத்த காற்றானது, மரங்களை வேரோடு சாய்த்து விடுவதன் விளைவாக மனித உயிர்களுக்கு பெரும் காயங்கள் ஏற்படுவதோடு, வீடுகள், வாகனங்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன. வேரோடு சாயும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள், பொது மக்களுக்கு காயங்கள் மற்றும் மின்சாரம் பாய்ந்து இறத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட வழிவகுக்கின்றன.

புயல் - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

பேரிடருக்கு முன்

இந்திய வானிலை ஆய்வு மையம் நான்கு நிலைகளில் புயல் சம்பந்தமான எச்சரிக்கைத் தகவல்கள் அறிவிக்கின்றன. முதல் எச்சரிக்கைத் தகவலானது "புயலுக்கு முன் கண்கானித்தல்" - புயல் உருவாவதற்கு 72 நேரத்திற்கு முன் வழங்கப்படும் எச்சரிக்கைத் தகவலாகும்.இரண்டாம் தகவலானது "புயல் தயார் நிலை" - 48 மணி நேரத்திற்கு முன்பாக வழங்கப்படும் தகவலாகும். இத்தகவலில் புயல் உருவாகும் இடம் செறிவு, புயல் நகரும் திசை, புயல் ஏற்படின் பாதிப்பிற்குள்ளாகும் கடலோர மாவட்டங்கள் குறித்தும், மீனவர்கள், பொதுமக்கள், ஊடகம் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும் அடங்கியிருக்கும். :மூன்றாம் நிலையானது "புயல் எச்சரிக்கை" - புயல் கடற்கரையை தாக்கவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வழங்கப்படும் தகவல் ஆகும். இத்தகவலில், புயல் எந்த இடத்தில் கடலை கடக்கும் என்ற செய்தி அடங்கியிருக்கும். இந்த எச்சரிக்கைத் தகவலானது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, தற்போது புயல் மையம் கொண்டுள்ள இடம், செறிவு, எந்த இடம் மற்றும் எந்த நேரத்தில் புயல் தரையை கடக்கம் என்பன பற்றிய தகவல்களும், மழை பெய்யக்கூடிய பகுதிகள், பலத்த காற்று மற்றும் கடல் சீற்ற்ம் ஏற்படக்கூடிய தகவல்கள் குறித்தும் மீனவர்கள், பொதுமக்கள், ஊடகம் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் ஆகியன அடங்கியிருக்கும். நான்காம் நிலையானது, "புயல் கடற்கரையை கடந்த பின்பு ஏற்படக்கூடிய நிகழ்வுகள் குறித்த கண்ணோட்டம்"- புயல் கடற்கரையைக் கடக்கும் 12 மணி நேரத்திற்கு முன்பு வழங்கப்படும் தகவல் ஆகம். இத்தகவலில் புயல் மேலும் நகர்ந்து செல்லும் திசை மற்றும் அதன் காரணமாக உள் பகுதிகளில் நிகழக்கூடிய மோசமான வானிலை நிகழ்வுகள் குறித்தும் அடங்கியிருக்கும். புயல் எச்சரிக்கைத் தகவல் அறிக்கையில் கீழ்க்கண்ட வண்ணக்குறிப்புகள் மூலம் புயல் எச்சரிக்கைத் தகவல்கள்வழங்கப்படும்.

எச்சரிக்கை நிலை வண்ணக்குறிப்பு
புயல் எச்சரிக்கை இல்லை பச்சை
புயலுக்கு முன் கண்கானித்தல் மஞ்சள்
புயல் தயார் நிலை ஆரஞ்சு
புயல் எச்சரிக்கை சிவப்பு
பேரிடருக்குப்பின்
 • புயலின்போது ஏற்பட்ட சேதங்களை மதீப்பீடு செய்தல்
 • காணாமல் போனவர்களை கண்டறிவதற்கும், மனித உயிரழப்புகள் மற்றும் காயங்கள், உடைமைகள் சேதம், கால்நடை இழப்புகள் மற்றும் பயிர் சேதங்கள் என அனைத்து விதமான சேதங்களுக்கும் நிவாரணம் வழங்கிட மதிப்பீடு செய்ய குழுக்கள் அமைத்தல்
 • குப்பைகளை அகற்றுதல், கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பிகளை சீரமைத்தல் மற்றும் அடிப்பபடை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு அதிக பணியாளர்களை நியமனம் செய்தல்
 • பாதிப்புகள் அதிகம் ஏற்படின், உயிரிழந்த மனித உடல்கள் மற்றும் கால்நடைகளின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் சிறப்புக் குழுக்கள் நியமனம் செய்தல்
 • சாலையோரங்களில் கொட்டப்டும் உணவுப்பொருள்களை அப்புறப்படுத்துதல்
 • வான்வழி மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை, வெள்ளம் மற்றும் கனமழைக் காலங்களில் அணுக முடியாத பகுதிகளுக்குக் கொண்டு சேர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தல்.
 • நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் மக்களுக்கு உணபுப்பொருள்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்
 • தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களது பாதுகாப்பினைக் கருதி போர்வைகள் மற்றும் துணிகள் போதுமான அளவில் வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
 • குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் விதவைகள்ஆகியோருக்கு உள்ளாடைகள் மற்றும் கூடுதல் துணிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்
 • பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக உடனடியாக சீரமைத்தல்
 • ஜே.சி.பி, டிராக்டர்கள் போன்ற இயந்திரங்களை ஏற்பாடு செய்தல்