மாநில செயலாக்க குழு

தேசிய பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவு 20(1)-ன் படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவும் வகையில் மாநில செயலாக்கக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதும், பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியை கையாள்வதும் அது குறித்து மாநில அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதும் மாநில செயலாக்க குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இக்குழு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் உடனடி நிவாரண பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.

தமிழக அரசின் மாநில செயலாக்குழு தலைமைச் செயலாளரை தலைவராகவும் கீழ்க்கண்ட உறுப்பினர்களை கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது,

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,
  • நிதித்துறை செயலாளர்,
  • பொதுப்பணித் துறை செயலாளர்,
  • நெடுஞ்சாலைத்துறை செயலாளர்,
  • உள்துறைகளின் செயலாளர்

மேற்படி, குழுவின் கூட்டத்தில் மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்.