மாவட்ட அவசரகால கட்டுபாட்டு மையம்

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதனதன் தலைநகரில் மாவட்ட அவசரகட்டுபாட்டு மையம் உள்ளன. மாவட்ட அவசரகால கட்டுபாட்டுமையங்கள் அந்தந்த மாவட்ட மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகிறது. மாவட்ட அவசர கால கட்டுபாட்டு மையம் பேரிடர் காலங்களில் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பெறப்படும், முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகளுக்கு ஏற்ப தேடுதல், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வட்ட, கிராம மட்டத்தில் சென்றடையும் வகையில் தகவல் பரிமாற்றம் செய்கின்ற பணியை மேற்கொள்கிறது. பேரிடர் காலங்களில் பிற தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் ஈடுபடுத்தி மாவட்ட அளவில் தேடுதல், மீட்பு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்புடைய தகவல்களை பரிமாற்றம் செய்து அதனை உடனுக்குடன் மாநில வருவாய் ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களுக்கு தெரிவிக்கிறது. இந்த மையத்தினை பொதுமக்கள் தொடர்புகொள்ள வசதியாக 1077 என்ற எண்ணுடன் கூடிய கட்டமைய்யா தொலைபேசி இணைப்பு உள்ளது. இவற்றை தவிர கூடுதல் அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 13 கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்திலும் கீழ்க்கண்ட வருவாய் கோட்ட அலுவலகத்தில் இயங்கி வருகின்றன.

  • தொண்டையார்பேட்டை
  • சிதம்பரம்
  • தாம்பரம்
  • பொன்னேரி
  • திண்டிவனம்
  • மயிலாடுதுறை
  • மன்னார்குடி
  • பட்டுக்கோட்டை
  • அறந்தாங்கி
  • பரமகுடி
  • பத்மனாபுரம்
  • சேரன்மகாதேவி
  • திருசெந்தூர்
  • குன்னூர்

இந்த அவசரகால கட்டுப்பாட்டு மையங்களில் மிக அதிக அலைவரிசையுடன் கூடிய தொலை தொடர்பு சாதனம், கணினி, வலைதள இணைப்பு மற்றும் தொலைகாட்சி போன்ற வசதிகள் உள்ளன.