சுனாமி மறுவாழ்வு

அவசரகால சுனாமி மறுவாழ்வு திட்டம் (ETRP)

உலகவங்கியின் நிதி உதவியால் ரூ.1852.00 கோடி நிதி உதவியுடன் 13 கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்படி பேரிடரில் பாதிக்கப்படும் வீடுகள் சீர் செய்து தரவும், பேரிடர் அபாய தடுப்பு வீடுகள், விளைநிலங்கள் மீட்டல் மற்றும் மீன்வளம் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுனாமி அபாய உதவி திட்டம் (TEAP)

.

இத்திட்டம், ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் ரூ.629.00 கோடி மதிப்பீட்டில் 13 கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் வாழ்வாதாரம் மறுசீரமைப்பு, சாலை மற்றும் பாலம் கட்டுதல், துறைமுகங்கள், ஊரக மற்றும் நகர கட்டமைப்புகள், திறன் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுனாமிக்கு பிறகு நிலையான வாழ்வாதார திட்டம் (PTSLP)

இத்திட்டம், சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் மூலம் ரூ.129.00 கோடி மதிப்பீட்டில், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கடலோர மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு, மறுகட்டமைப்பு செய்ய நீண்டகால திட்டமிடுதலை உள்ளடக்கியது ஆகும்.

கடலோர சமூக பாதிப்பு குறைப்புத் திட்டம் (VRCC)

கடலோர சமூக பாதுகாப்புத் திட்டம், ரூ.1959.00 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் 13 கடலோர மாவட்டங்களில் பொது உட்கட்டமைப்புகளை புனரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.