நிவாரணம் மற்றும் மறுவாழ்வு

நிவாரணம் மற்றும் மறுவாழ்வு

பேரிடர் தாக்குதலின் போதோ, பேரிடர் குறித்த முன் அறிவிப்பு வரும் நேரங்களிலோ, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை அருகில் உள்ள நிவாரண முகாமுக்கு கொண்டு செல்வதே முதன்மை பணியாகும். இது விலை மதிப்பு மிக்க மனித உயிர்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. மக்கள் நிவாரண முகாம் கொண்டு செல்லப்பட்டவுடன் அவர்களுக்கு அரசாங்கம் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது என்பது மிக முக்கியமாகும். தமிழக அரசானது தேசிய பேரிடர் மேலாண்மை முகமையால் வரையறை செய்யப்பட்ட அளவு கோலின் படி நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது.

பாதிக்கப்பட்ட / பாதிப்படையக்கூடிய பொது மக்களுக்கு உடனடியாக நிவாரணம் / மறுவாழ்வு உதவிகளை வழங்குவதே பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வின் முக்கிய குறிக்கோளாகும். தமிழகத்தை பொருத்தவரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, அடிப்படை வசதிகள் மற்றும் உடல்நலம் பேணல் ஆகியவற்றை உறுதி செய்வதையே நிவாரண உபாயமாக கடைபிடித்து வருகிறது. பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோரை தனிப்பட்ட முறையில் கையாளவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனதளவில் அவர்களது மனோதைரியத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற் கொள்வதில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் / சூறாவளி புகலிடங்கள் / இதர நிவாரண முகாம்கள்

இம்முகாம்களில் சமையலரை, நீர் இருப்பு மற்றும் கழிவரை வசதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மையங்கள் அரசு உறுதி செய்துள்ளது.

கால்நடைகளை தங்க வைக்க தனியாக புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டங்கள் பள்ளியறைகள், சமுக கூடங்கள், சுய உதவிக்குழுக்களுக்கான கூட்ட அரங்கு, சமுதாய கூட்டங்கள், தொழில்முறை பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றை நடத்த ஏதுவான பன்முக கட்டமைப்பு வசதிகள் கொண்டவை. இக்கட்டமைப்புகள் மூலம் சமுதாய மேம்பாடு ஏற்பட உதவும்.

 • கடலோர பேரிடர் அபாயக்குறைப்பு திட்டம் (ஊனுசுசுஞ) மூலம் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் உணவு தேவையான குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமான கழிவரைகள் ஆகியவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விழிகாட்டுதல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மேலும் எரிப்பொருள் சேமிப்பு வசதியுடன் கூடிய மின்னாகிகள் மூலம் மின் வசதியுடன் வழங்கப்படுகிறது.
 • 5 ச.மீக்கு ஒருவர் என்ற வீதத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மின் விளக்கு வசதியுடன் செய்யப்பட்டு உள்ளது.
 • தேவையான இடங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள், எமர்ஜென்சி விளக்குகள், தேடுதல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்திகள் ஆகியவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 • முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளவர்களின் பாதுகாப்பை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.,

தற்காலிக மற்றும் இடைநிலை புகலிடங்கள்

மோசமான பேரிடர்கள் நிகழும் போது தற்காலிக மையங்களில் பொது மக்களை தங்க வைக்கும் காலம் சில சமயங்களில் அனுமானிப்பதை விட நீண்டு செல்லலாம். அசாதாரணமான பேரிடங்கள் மிகவும் அபாயகரமானவை. எனவே, 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது ஏற்படுத்தப்பட்ட இடைநிலை மையங்களை போல் உருவாக்க நேரிடும்.

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரிடரால் கடலோர வாழ்மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து பாதுகாப்பான வேறு இடத்திற்கு குடிப்பெயர தேவை ஏற்பட்டது. அரசானது இருக்கும் இடங்களில் மிகவும் பொருத்தமான இடத்தை தேர்வு செய்து மக்களை குடியமர்த்தியது. பேரழிவு காரணமாக இருப்பிடம் அழிக்கப்பட்ட / சேதப்படுத்தப்பட்ட மக்கள் தற்காலிக வசிப்பிடங்களில் வசிக்க வழிவகை செய்யப்பட்டது.

நிவாரண மைய மேலாண்மை

அடிப்படை வசதிகளான, உணவு, தண்ணீர், சுகாதார வசதிகள் ஆகியவை நிவாரண மையங்களில் வழங்கப்பட்டன. மேலும் தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பு, பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. பேரிடரில் பாதிக்கப்பட்டும் மக்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய நிவாரணம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. இது தொடர்பான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சுற்றறிக்கை எண்.NC 1 (4) / 3137 /2017 நாள் 08.09.2017 ன்படி செயல்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • 121 பன்முக பாதுகாப்பு மையங்கள் நீங்கலாக, பள்ளி, அங்கன்வாடி மையங்கள், புயல் நிவராண மையங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டங்கள் ஆக மொத்தம் 3172 கட்டிடங்கள் கடலோர மாவட்டங்களில் ஏற்படும் பேரிடங்களின் போது நிவாரண மையங்களாக பயன்படுத்த இனம் கண்டறியப்பட்டுள்ளன.
 • மாற்றுத்திறனாளிகள், முதியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை தர சிறப்பு செய்யப்பட்டுள்ளன.
 • பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மின்சார உபயோக கட்டமைப்புகள் பரிசோதனை செய்து அவற்றின் பாதுகாப்பு வசதி செய்யப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள வழிகாட்டுதல்களின் படி உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் குறைந்த பட்ச தரம் உறுதி செய்து வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறைந்தபட்ச நிவாரணம் (உணவு மற்றும் ஊட்டச்சத்து)

 • குழுந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள் வழங்கப்படுகிறது.
 • முகாம்களில் உள்ள சமையலறைகளில் சுகாதாரம் பேண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 • சிறார்களுக்கு நாள் ஒன்றக்கு குறைந்தபட்சம் 1700 கலோரிகள், பெரியவர்களுக்கு 2400 கலோரியும் பெறும் வகையில் உணவுகள் வழங்கப்படுகிறது.

குடிநீர், நீர் அகற்றம் மற்றும் சுகாதாரம்

பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் மூலம் பரவும் தொற்று நோய்கள் தாக்கா வண்ணம், சுத்தமான குடிநீர் வழங்குதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாளொன்றுக்கு ஓரு நபருக்க குறைந்தது 3 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.

முகாம்களில் தங்கும் ஆண், பெண் மற்றும் சிறார்களுக்கு சுகாதாரம் மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை காக்கப்படுவது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய வழிகாட்டுதலின் படி குறைந்த பட்ச தர அளவுகளின்படி சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது.

சுகாதாரம் தொடர்பாக பின்வரும் நடைமுறைகள் நிவாரண முகாம்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன

 • 30 நபர்களுக்கு 1 கழிவறை
 • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனித்தனியே கழிவறை வசதி
 • கழிவறை மற்றும் குளியல் பயன்பட்டுக்கு நபர்
 • நபர் ஒருவருக்கு நாலென்றுக்கு சுகாதாரத்திற்காக 15 லிட்டர் நீர் வசதி செய்து தரப்படல்
 • பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்குதல்
 • முகாம்களை தூய்மையாக வைத்திருக்க ஏதுவாக திடக்கழிவுகளை முறையாக அகற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்

நிவாரண போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை

தயார் நிலையில் இருத்தலின் ஓர் அங்கமாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம் (TNCSC) மூலம் இரண்டு மாதங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை பாதிப்பு / மிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு மன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

உடல்நலம் மற்றும் மனநலம் பாதுகாப்பு

பேரிடரால் பாதிக்கப்பட்ட கர்ப்பணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், முதியோர் மற்றும் கடும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியரது உடல்நலன் மேலும் பாதிக்காத வகையில் அவர்களை காக்க தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. மேற் கூறிய வழிகாட்டுதல்களை தவறாது கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பபட்டுள்ளனர்.

அவசரக்கால ஆயத்த நிலை மற்றும் உடல்நலம் பேணல்

 • நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் முகாம்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய்கள் பரவா வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
 • கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
 • மருத்துவர்கள் / மருத்துவ உதவியாளர்கள் / தனியார் மருத்துவமனைகள் மூலம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல தகுந்த போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சமூக நலத்துறை மற்றும் மனநலன் ஆணைய தொழில்நுட்ப வல்லுநர் குழு உதவியுடன் (ஞடிளவ கூசயரஅயவiஉ ளுவசநளள னுளைடிசனநச) -ஆல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். சுனாமி பேரழிவுக்கு பின்னர் மேற்படி சிகிச்கைகள் வழங்குவதில் சிற்பபாக செயல்பட்டு வருவது தெரிய வருகிறது.

விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான நிவாரணம்

 • குடும்பத்தில் இருந்து தனியே பிரிந்து வாழும் விதவைகள் மற்றும் அனாதை பிள்ளைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
 • பேரிடர் தாக்கம் காரணமாக கணவரை இழந்த விதவைகளுக்கு 15 தினங்களில் விதவை சான்று வழங்கப்படுகிறது. மேலும், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் 15 தினங்களில் தேவையான சான்றுகள் வழங்கப்படுகின்றன.
 • தமிழக அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அனாதை குழந்தைகளுக்கான நிவாரணங்கள் முறையாக வழங்கப்படுகின்றன.
 • அரசாணை நிலை எண். 380 வருவாய்த் துறை நாள்: 27.10.15-ல் தெரிவித்துள்ளபடி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடு இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

கால்நடை பாதுகாப்பு

பேரிடரால் பாதிக்கப்படும் / பாதிக்கப்படக்கூடிய கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கால்நடை தீவனம் இருப்பு, கால்நடை மருந்துகள் இருப்பு வைப்பு தொடர்பாக இணை / துணை இயக்குநர்கள், கால்நடைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை தீவன இருப்பு தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எதிர் வரும் பருவகாலத்தை எண்ணத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு முன்கூட்டியே கால்நடை தீவனங்கள் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகின்றன.

மீட்பு மற்றும் மறுவாழ்வு

(அ) மனம் சார்ந்த - சமூக உதவிகள்

பேரிடர் எதிர்கொள்ளுதல் நிதழ்வு தொடங்கியவுடனேயே, மீட்பு நடவடிக்கைகள் பின்வரும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 • பேரிடரால் இருப்பிடம் இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தி தருதல்.
 • விதிகளில் தெரிவித்துள்ளபடி நிவாரண உதவிகள் வழங்குதல்
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குதல்
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தல்.
 • சமுதாய பங்களிப்புடன், தொழில்நுட்ப உதவியுடன் சேர்ந்த பாதுகாப்பான மறுகட்டமைப்பு வசதிகள் செய்து தருதல்.

தமிழக அரசு மற்றும் சமூக நலத்துறையும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கும். 2004 சுனாமி பேரிடரின் போது மனநல ஆலோசனை மையங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டன. பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) 500 முதன்மை பயிற்சியாளர்களுக்கும், 500 (CLWS) அமைப்புகள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டன. மேலும், சமூகநலத்துறை மூலம் கிராமப்புற செவிலியர்கள், போன்றோரை மனநல ஆலோசனை வழங்க பயன்படுத்தி வருகிறது. மேலும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நேரு யுவ கேந்திராவை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஓவியம், யோகக்கலை, இசைப் போட்டிகளை நடத்த சிறுவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மனநல பயிற்சியானது பேரிடரால் பாதிக்கப்படுபவர்களை மீட்டுக் கொண்டுவருவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

அரசு மற்றும் அரசு சாரஅமைப்புகள் மூலம் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 14305 பேருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊரகப்புற பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. NIMHANS, Medicines sans Frontiers, Schizophrenic Research Center, Institute of Mental Health ஆகியவை மூலமும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

வாழ்வாதார உதவிகள்

பேரிடர் தாக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும். இது போன்ற சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2016-17ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை எதிர்கொள்ள ஏதுவாக மேற்படி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களுக்கு நீட்டித்து வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் பாதிப்பு பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு உதவ கடலோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டம் மற்றும் சுனாமி மறுவாழ்வு திட்டங்கள் மூலம் சிறப்பு திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன.

அரசு அல்லாத அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் ஈடுபடுதல்

பேரிடரின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அரசாங்கம் மட்டும் அல்லாது தேசிய, சர்வதேச, சில சமயங்களில் அயல் நாடுகளின் உதவியுடனும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய அனைத்து வித வெளிப்படையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைப்புசார் நடைமுறைகள்

மாநிலத்தில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் பொறுப்பு வகிக்கிறார். இவரே மாநிலத்தின் நிவாரண ஆணையர் ஆவார்.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் பேரிடர் மேலாண்மை அலுவலர் ஆவார். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையர் அப்பணியை கவனித்து வருகிறார். பேரிடர்களின் போது மாவட்ட ஆட்சியர்களுடன் பிறதுறை அலுவலர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, நகராட்சி, ஊராட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, நீர்வள ஆதாரத் துறை, ஆகியவை ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி இப்பணிகளை மேற்கொள்ளும். மேலும் சமீபகாலமாக அரசு அல்லாத தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பெருமளவு அரசுக்கு துணை புரிகின்றன.