அவசர மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் திட்டம்

வானிலை முன்னறிவிப்பு தொடர்பான தகவல்களின் அடிப்படையில், பல்வேறு பேரிடர்களால் ஏற்படும் தாக்கத்தை அளவிட்டு அதனடிப்படையில் அவசரகால மீட்பு முன்னேற்பாடுகளை முறைப்படுத்தும் திட்டம் (TN-SMART) ஒன்றினை செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் வானிலை தகவல் மேலாண்மை, பேரிடர் அபாயம் மற்றும் அவசர கால மீட்பு குறித்த தரவு மேலாண்மைக்கும் பயன்படும். இத்திட்டம் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும். மழைப்பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன் கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவிற்கு தெரிவிப்பதன் மூலம் தேவையான மீட்பு பணிகளுக்கு திட்டமிட இம்முறை உதவிபுரியும்.