இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய தொலை உணர்வு மையம், தேசிய பயிர் முன்னறிவிப்பு மையம், மாநில நீர் வளம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, குடிமைப் பொருள் வழங்கல் துறைகள் மற்றும் மின்சார வாரியம் போன்றவைகளிலிருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் வறட்சியினை ஏற்படுத்தும் காரணிகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்வதை உறுதி செய்யும் வகையில் மாநில அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம் அரசாணை எண். 38, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நாள் 18.01.2018 மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையம், முதன்மை செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும்.மாநில வறட்சி கண்காணிப்பு மையம் மாநிலத்தில் ஏற்படும் வறட்சியை, வறட்சி மேலாண்மை கையேடு 2016 வழிகாட்டுதலின்படி தொடர்ந்து கண்காணிக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவிற்கு உதவி புரியும்.