மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையில் புவிசார் தகவல் மையம் அமைப்பதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதி 2017-2018-லிருந்து ரூ.7.50 கோடி நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புவிசார் தகவல் மையானது, தேசிய அவசர மேலாண்மை தரவுகள் வழியில் மாநில அவசர மேலாண்மை தரவுகளை உருவாக்கிட வழிவகுக்கும். இம்மையம், புயல் சீற்ற முன்னறிவிப்பு மாதிரிகளை உள்ளடக்கி DecisionSupportSystems (DSS)த்தை உருவாக்கும். இம்மையம், பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையம், தொலை உணர்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம் சென்னை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.