அவசர நிலை எதிர்கொள்ளுதல்

அடிப்படை வசதிகள், உதவி தரும் அமைப்புகள் மற்றும் மனித வள திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையானது மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை திறனை வலுப்படுத்தி வருகிறது.

ஆபத்துக்கால இடர்களை எதிர்கொள்ள துறையானது இதர துறைகள், அரசு மற்றும் இடர்களை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் பெற்ற தனியார் தொழில்நுட்ப மையங்கள் உதவியுடன் சூழ்நிலைகளை எதிர்கொண்டு இடர் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பேரிடர் எதிர்கொள்ளுதல்

பேரிடர் எதிர்கொள்ளுதல் 13 நடவடிக்கைகள் என்பது பேரிடரால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஆகியவற்றை குறைத்தல் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட / பாதிக்கக்கூடிய மக்களை மீட்டு எடுத்தல் ஆகியவை அடங்கும். பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பது பேரிடர் ஏற்பட்ட உடன் தொடங்கி பேரிடர் முடிவுக்கு வந்தது என்று அறிவிப்பு வரும் வரை இது தொடர்பான மீட்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.

பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பது மிகுந்த பிரச்சனைக்குரிய இடர்களை, குறுகிய கால அவசரசத்திற்குள், கைவசம் உள்ள தகவல் மற்றும் வளங்களை கொண்டு எதிர்கொள்ளுதல் ஆகும். இது பேரிடர் மேலாண்மையின் நான்கு பணிகளில் மிகவும் சிக்கலான பணியாகும்.

பேரிடர் எதிர்கொள்ளுதல் என்பத உடனடி தேவைகளான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், முதலுதவி, புகலிடங்கள் ஆகியவற்றை வழங்குதலோடு மட்டுமில்லாமல் இதர அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மீட்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதை குறிக்கும்.

சிறப்பான பேரிடர் எதிர்கொள்ளுதலுக்கு தொடர்புடைய அனைத்து துறைகளும் இடர்கள் குறித்த தெளிவான விவரத்தையும், இடர்கால ஏற்படக்கூடிய மின்விளைவுகள், அவற்றினை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்து இருப்பதும் ஆகும்.

மாநிலத்தின் வருவாய்த்துறையே மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பு துறையாக செயல்படுகிறது. பேரிடர் ஏற்படும் நேரங்களில் இதர துறைகள் தங்களது முழு ஒத்துழைப்பையும் தரல் வேண்டும். அவசரகால நேரங்களில் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை, மாநில அளவிலான இதர கட்டுப்பாட்டு அறைகள் முழு வேகத்தில் செயல்படுகின்றன.

அவசர காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முதன்மை பணிகள் கீழ்வருமாறு:-

  • கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களின் மூலம் தேவை மதிப்பீடு செய்வது.
  • பாதிப்பு ஏற்படம் பகுதிகளில் தேவைப்படும் பொருட்களை சமமாக பகிர்ந்தளித்தல்
  • புகலிடம் / நிவாரண மையங்கள் உணவு, உடை, போன்ற அடிப்படை வசதிகளுடன், பொது சுகாதாரம் மற்றும் சுத்தமான இருப்பிட வசதிகள் அளித்தது.
  • நிவாரண பொருட்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடித்தல்.

பல்வேறு வகையான பேரிடர் எதிர்கொள்ளுதல் நடவடிக்கைகளில் எந்தெந்த துறைகள் ஈடுபட் வேண்டும் என்ற விவரம் பணிவருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

வ.எண் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் பொறுப்பு துறைகள்
1. மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்துதல் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை.
2. இடர்கால தகவல் தொடர்பு வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாநில அவசர கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கட்டுப்பாட்டு அறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, ஊடகங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள்
3 பொது மக்கள் வெளியேற்றம் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஊரக மற்றும் நகராட்சி துறைகள், காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஆயுதப்படை, தன்னார்வலர்கள், 108 ஆம்புலன்ஸ், பொதுமக்கள்
4 மீட்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்தல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள்.
5 போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் மாற்று வழி அமைத்தல் போக்குவரத்து காவல் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தன்னார்வலர்கள்.
6 பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருதல் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள், காவல் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தன்னார்வலர்கள்
7 சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை
8 தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை , மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள், காவல் துறை, பொது மக்கள்
9 முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சை சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம்.
10 நிவாரண மையங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அளித்தல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
11 இறந்த மற்றும் காயம் அடைந்த மக்களை இனம் கண்டறிதல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, சுகாதாரத்துறை, மாநிலம் உள்ளாட்சி அமைப்புகள்.
12 காயமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை சுகாதாரத்துறை
13 பாதிப்பு மற்றும் வளம் மதிப்பீடு வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொழில்நுட்ப வல்லுநர்கள்
14 பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தல் ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சலைத்துறை, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள்
15 தொழிற்று நோய் பரவுதலை தடுத்தல் மற்றும் சுகாதார முகாம்கள் அமைத்தல் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
16 தேவை அடிப்படையில் தற்காலிக வசிப்பிடங்கள் அமைத்து தருதல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, உள்ளாட்சி அமைப்புகள்
17 நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கான பொருட்களை அனுப்புதல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
18 இடிபாடுகள் மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் மாநில பேரிடர் மீட்புப்படை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள்
19 சாலை வசதி, தகவல் தொடர்பு சீரமைத்தல் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
20 குடிநீர் வசதி தமிழ்நாடு வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகள்.
21 மின்வசதி சீரமைப்பு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
22 போக்குவரத்து சீரமைப்பு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
23 உணவு வசதி வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
24 நிவாரண பொருட்கள் வழங்குதல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை
25 தற்காலிக பிணவறை / இறந்த உடல்கள் அகற்றம் சுகாதாரத்துறை, வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
26 கால்நடைகள் / வீட்டு வளர்ப்பு பிராணிகளை வெளியேற்றுதல் கால்நடைப் பராமரிப்புத்துறை, புளு கிராஸ், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள்
27 இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல் கால்நடை பராமரிப்புத்துறை
28 இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுதல் வருவாய் நிர்வாக பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை மற்றும் தொடர்புடைய இதர துறைகள்.