பேரிடர் தணிப்பு திட்டத்தின் கூறுகள்

பேரிடர் தணிப்பு திட்டத்தின் கூறுகள்

பேரிடர் அபாய மதிப்பீடு மற்றும் சேதங்களின் மேம்பட்ட பகுப்பாய்வினை மேற்கொள்ளும் பொறுப்பு, மாநிலத்தின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் பொறுப்பாகும்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளினால் பாதிப்புகளுக்குள்ளாகிய இடங்களை சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். பேரிடர் பாதிப்பு மற்றும் சேதம் ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் மாவட்ட மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் உண்மையான நிலவரத்தை கண்டறியும் கலந்தாய்வுகள் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கலந்தாய்வு முடிவுகளை பரிசீலித்து பாதிப்படையக் கூடிய இடங்களை கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை, அதை சார்ந்த கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் / அலுவலர்களைக் கொண்டு பேரிடர் குறித்த ஆய்வுகளை நடத்தி உள்ளூரில் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • இவ்வகை ஆய்வுகள் பேரிடரினால் ஏற்படும் பாதிப்பு, பாதிப்பினால் உண்டாகும் சேதங்கள், அதனை தொடர்ந்து ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களையும் பேரழிவினை தவிர்க்கும் முறைகளையும் கண்டறிந்து உயிர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை காத்திட உதவுகின்றது.
  • ஆய்வின் முடிவுகள் பேரிடர் ஆபத்து மற்றும் பாதிப்புகள் அதனை தடுக்கும் முறைகளை மேம்படுத்திய தகவல்களாக தருகின்றது.

பேரிடர் மேலாண்மை சேதங்கள் ஏற்படக்கூடிய மாவட்டங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை அண்ணா மேலாண்மை நிறுவனம் அமைத்து கொடுத்துள்ளது.

கட்டுமானப் பணிகள்

கட்டிட துணைவிதிகள்

மாநில அரசின் தொழில் நுட்பம் மற்றும் சட்டத்துறை பொருத்தமான கட்டிடங்களுக்கான விதிகளை உருவாக்குவது, வெள்ள கட்டுபாடுக்கான வரைவு மண்டலங்களைப் உருவாக்க உதவுகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் குடிமராமத்துப் பணிகளும் அதன் பராமரிப்பும்

பள்ளிகளும், மருத்துவமனைகளும் ஒரு மாநிலத்தின் திறனை மேம்படுத்தக் கூடிய உள்கட்டமைப்புகள் ஆகும். இவ்வகை கட்டிடங்களை பராமரித்தல், தகுந்த கட்டமைப்பு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல், தாங்கும் தன்மையை புதுப்பித்தல் ஆகிய பணிகளை பொது பணித்துறையால் மேற்கொள்ளப்படும். தற்பொழுது நிலையில் இருக்கும் வளர்ச்சி பணிகள் மற்றும் கட்டிடப்பணிகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ற பேரிடர் அழிவுகளை தாங்கும் வகையில் யுக்திகளை கொண்டு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள வடிகால்கள், கழிமுகங்கள் உள்ளடக்கிய வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் தொடங்கப்படும் அல்லது தற்போதைய நிலையில் உள்ள கட்டிடப் பணிகளை ஆராய்ந்து அதற்கேற்றார்ப்போல் நுட்பமான முறையில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி பேரிடர் தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும்.

பராமரிப்பு

பேரிடரால் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் அமைந்துள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளான பராமரிப்பு, பழுது பார்க்கும் பணிகள், புதுப்பித்தல், மறுசீரமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊரக வளர்ச்சி பணிகள் மற்றும் ஆழுசூசுநுழு­ஹ போன்ற திட்டங்களிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும். பேரிடர் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க வளர்ச்சித் திட்டங்களான தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிக்கும் நீர் தேக்கங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதா என்று தணிக்கை ஆய்வு செய்தல் அவசியம் ஆகும்.

அது போலவே நகர்புற வளர்ச்சித் துறையும் மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளை கொண்டு அனைத்து திட்டங்களிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றம்

அனைத்து அமைப்புகளும் ஆராய்ச்சி மேற்கொள்ளுதற்கான நோக்கங்கள்,

1. பேரிடர் பேரழிவினை தவிர்க்க குறைந்த செலவினை மற்றும் தொழில் நுட்பங்களுடன் கூடிய உள்கட்டமைப்பினை ஏற்படுத்து.
2. பேரிடர் மேலாண்மையை நோக்கமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து பேரிடர் பேரழிவினை தடுக்கும் யுக்திகளை உருவாக்குவது.
3. சமூகம் சார்ந்த மற்றும் இடத்திர்க்கேற்றார் போல் உள்ளூர் கலாச்சார மற்றும் பாரம்பரிய முறையில் கூடிய பேரிடர் மேலாண்மை யுக்திகளை கண்டறிந்து, அதனை மாநில பேரிடர் மேலாண்மை திட்டங்களில் உட்படுத்துவது.