வறட்சி

வறட்சி என்பது பெரிய அளவில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிகழ்வாகும். அதன் கால அளவுகள் மற்றும் தீவரம் ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகின்றன. கணிசமான மழையளவு எதிர்பாக்கப்படும் பகுதிகளில் குறைவாக பெய்யும் மழையினால் வறட்சி ஏற்படுகிறது. வறட்சி என்பது ஒரு பகுதியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மழையளவு குறைவதால் ஏற்படுவதாகும். கடுமையான வறட்சியானது அதிக வெப்பநிலை, அதிக காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் போன்ற மற்ற பருவநிலை காரணிகளால் மேலும் மோசமடைகிறது. இது போன்ற காரணங்களால் வறட்சி வெவ்வேறு வழிகளில் பரந்த அளவில் உணரப்படுகிறது. வறட்சி வழிகாட்டு நெறிமுறைகள் 2016-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

 • வானிலை வறட்சி - ஒரு பகுதியில் இயல்பான மழையளவை விட கணிசமாக குறைந்த மழையளவு ஏற்படும்போது உருவாகிறது.
 • நீர்வளங்களின் வறட்சி - நீர்ப்பரப்பின் மீது குறைந்த நீரோட்டம், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் வறண்டு விடுதல் ஆகியவற்றால் நீர்மட்டம் குறைகிறது.
 • வேளாண்மை வறட்சி - மண்ணில் உள்ள குறைந்த அளவிலான ஈரப்பதம் பயிர்களின் வளர்ச்சியையும் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.
 • மண்ணில் ஈரப்பத வறட்சி - மழை குறைந்த பகுதிகளில் மண்ணில் உள்ள குறைவான ஈரப்பதமானது பயிர்களின் வளர்ச்சிக்கு துணை புரிவதில்லை.

பேரிடருக்கு முன்னும் பேரிடரின் போதும்

 • வட்டார அளவிலான வறட்சி மேலாண்மைத் திட்டமானது வேளாண்மைத் துறையால் தயார் செய்யப்பட வேண்டும்.
 • வேளாண்மைத் துறையானது வறட்சி எதிர்ப்பு விதைகள் வழங்குவது மற்றும் பிற உதவிகளையும் செய்ய வேண்டும். மேலும், மிதமான கடன்கள், மானியங்கள் மற்றும் குறு கடன்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • பருவ நிலை மற்றும் பயிர்களின் நிலை குறித்து வாராந்திர கண்காணித்தல்.
 • பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.
 • ஏற்கனவே இருக்கும் நீர் ஆதாரங்களான குளங்கள் மற்றும் சிறிய ஏரிகள் ஆகியவற்றை துhர்வாருதல்.
 • வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்குதல்

பேரிடர் அல்லாத போது

 • பாசனத்திற்காக அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை பலப்படுத்துதல் மற்றும் ஊடுருவும் குளங்கள் மற்றும் தடுப்பணைகள் உருவாக்குவதன் மூலம் இப்பேரிடர்களை தணிக்கலாம்.
 • வறட்சியைத் தாங்கும் பயிர்களை உருவாக்குவதில் வேளாண்மைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
 • மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாநில அளவில் ஏற்படுத்திட முன்னுரிமை வழங்குதல்.
 • பாசனத்திற்காக உயர் தொழில்நுட்பங்களை, குறிப்பாக வேளாண் தேவைகளை பூர்த்தி செய்யும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பான்கள் மற்றும் தண்ணீர் சேகரிக்கும் அமைப்புகள் உருவாக்குதல்.
 • குடியிருப்பு பகுதிகளில் உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்துதல் மற்றும் சேமித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்துதல்.
 • நீண்ட கால நோக்கில் நீர்த்தேக்கங்களை பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்குதல்.