தமிழ்நாடு பொது விபரங்கள்

தமிழ்நாடு 8°5’ மற்றும் 13°35’ வட அட்சரேகை 76°15’ மற்றும் 80°20’ கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவீத்ததையும், 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரையையும் கொண்டுள்ள தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பளவு 130.33 இலட்சம் எக்டர் ஆகும். தமிழ்நாடு நிலப்பரப்பு அடிப்படையில், பதினோராவது பெரிய மாநிலம் ஆகும். தமிழ்நாடு, தேசிய அளவில், மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதத்தைக் கொண்டு 7வது அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. எனினும், நாட்டின் நீர்வள ஆதாரங்களில் 3 சதவீதத்தை மட்டுமே கொண்டு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு பாசனத்திற்கான நீர் கிடைக்கப் பெறுவதில் அதிக இடர்பாடுகள் ஏற்படுவதுடன் பல்வேறு பருவ மாறுதல்களால் பாதிக்கப்படுவதாலும், வேளாண்மையில் ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகிறது.

2016-2017 புள்ளியியல் அறிக்கையின்படி தமிழ்நாட்டின் நிலப்பயன்பாட்டு விவரம் பின்வருமாறு

நிலப்பயன்பாடு

வ. எண். விவரம் பரப்பு (இலட்சம் எக்டர்) மொத்த நிலப்பரப்பிற்கு சதவிகிதம் ரூ
1 காடுகள் 21.57 16.55
2 நிகர சாகுபடி பரப்பு 43.47 33.35
3 இதர மரப்பயிர்கள் சாகுபடி நிலங்கள் 2.32 1.78
4 நிரந்தர மேய்ச்சல் நிலங்கள் 1.08 0.83
5 நடப்பு தரிசு நிலங்கள் 13.61 10.44
6 இதர தரிசு நிலங்கள் 18.47 14.17
7 பயிரிடுவதற்கேற்ற தரிசு நிலங்கள் 3.23 2.48
8 வேளாண்மை தவிர இதர உபயோகத்திலுள்ள நிலங்கள் 4.58 3.51
9 சாகுபடிக்கு இலாயக்கற்ற நிலங்கள் 4.58 3.51
மொத்த நிலப்பரப்பு 130.33 100.00
பயிரிடுதிறன் (ரூ)* 118%

(*) மொத்த பயிரிடும் பரப்பு (51.29 இலட்சம் எக்டர்) மற்றும் ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு (7.82 இலட்சம் எக்டர்)-க்குள்ள வேறுபாடு

2010-11-ஆம் ஆண்டு வேளாண்மை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில், 64.88 இலட்சம் எக்டர் நிலங்களை 81.18 இலட்சம் நில உடைமைதாரர்கள் உபயோகிக்கின்றனர். மொத்த நிலவுடைமைதாரர்களில் 92 சதவீதமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளால் மொத்த சாகுபடி பரப்பளவில் 61 சதவீதப்பரப்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சராசரி நில உடைமையான 0.80 எக்டர் என்பது, நாட்டின் சராசரி நில உடைமையை (1.15 எக்டர்) விட குறைவாகும்.

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழையளவான 921 மில்லி மீட்டர் நாட்டின் சராசரி மழையளவான 1,200 மில்லி மீட்டரை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி), கோடை காலம் (மார்ச் - மே), தென்மேற்கு பருவகாலம் (ஜூன்-செப்டம்பர்) மற்றும் வடகிழக்கு (அக்டோபர்- டிசம்பர்) பருவகாலங்களில் பெறப்படும் மழையளவானது முறையே 3ரூ 14ரூ 35ரூ மற்றும் 48ரூ ஆகும். மாநிலத்தில் தனி நபருக்கு கிடைக்கும் ஆண்டு சராசரி நீர் அளவு 750 கன மீட்டர். இது அகில இந்திய அளவான 2,200 கன மீட்டருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பாசன நீர் ஆதாரங்கள் மூலம் பயன்பெறும் நிகர பாசனப்பரப்பளவு விபரம் (2016-17) பின்வருமாறு

நீர் ஆதாரங்கள் வாரியான நிகர பாசனப் பரப்பு

ஆதாரம் எண்ணிக்கை (எண்கள்) நிகர பாசன பரப்பு (இலட்சம் எக்டர்) நிகர பாசன பரப்பில் சதவீதம்
வாய்க்கால் 2239 5.27 22.10
ஏரிகள் 41,127 3.02 12.66
கிணறுகள் 18,72,088 15.54 65.16
இதர பாசன ஆதாரங்கள்   0.02 0.08
மொத்தம் 23.85 100.00

தமிழ்நாட்டின் நிகர பாசனப் பரப்பில் 65 சதவீதம் கிணறுகள் மூலமாகவும், 22 சதவீதம் வாய்க்கால்கள் மூலமாகவும் 13 சதவீதம் ஏரிகள் மூலமாகவும் நீர்ப்பாசனம் கிடைக்கிறது.

மொத்த இறவை சாகுபடிப்பரப்பான 28.45 இலட்சம் எக்டரில் 77 சதவீத பரப்பளவில் உணவுப் பயிர்களும், 23 சதவீத பரப்பளவில் உணவல்லாத இதர பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேற்பரப்பு நீர்வள ஆதாரம்

மாநிலத்தில் 34 ஆறுகள் உள்ளன. இவை 127 உபவடிநிலங்களை உள்ளடக்கிய 17 பெரிய ஆற்று வடிநிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலத்தின் மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம் 885 டி.எம்.சி. கன அடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின் மூலம் அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படும் 264 டி.எம்.சி கன அடி நீரும் அடங்கும். நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 89 அணைகளின் மொத்தக் கொள்ளவு 238.58 டி.எம்.சி கன அடி ஆகும். மேலும், மாநிலத்திலுள்ள 39,202 ஏரிகளில், 14,098 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நிலத்தடி நீர்வள ஆதாரம்

மாநிலத்தில் 2011-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி வருவாய் குறுவட்ட அலகின்அடிப்படையில் மாநிலத்திலுள்ள 1,129 குறுவட்டங்களில், 374 குறுவட்டங்கள் அதிநுகர்வு (டீஎநச - நுஒயீடடிவைநன) குறுவட்டங்களாவும், 48 குறுவட்டங்கள் அபாயகரமான (ஊசவைiஉயட) குறுவட்டங்களாகவும், 235 குறுவட்டங்கள் மித அபாயகரமான (ளுநஅi-ஊசவைiஉயட) குறுவட்டங்களாகவும், 35 குறுவட்டங்கள் உவர்நீர் (ளுயடiநே) குறுவட்டங்களாகவும், 437 குறுவட்டங்கள் பாதுகாப்பான (ளுயகந) குறுவட்டங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.