அணுசக்தி பேரழிவு

அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு பேரிடர் அவசர காலங்கள்

தமிழ்நாட்டை பொருத்தவரை அணுசக்தி தொடர்பான அமைப்புகள் கல்பாக்கம் மற்றும் கூடங்குப் பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. அணுகதிர் வீச்சு தொடர்பான பேராபத்து பொது மக்களுக்கு ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளப்பட வேண்டிய தொழிநுட்ப வழிமுறைகளை தேசிய மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு வழங்க அனுசக்தி துறை ஓருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டு வருகிறது. அனுசக்தி வீச்சு தொடர்பான பேராபத்து காலங்களில் நெருக்கடி மேலாண்மை குழு உடனடியாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கான உள்ளூர் நிர்வாகத்திற்கும் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்தல்.

அணுஉலை அமைப்புகளில் ஏற்படும் அணுகதிர் வீச்சு பேராபத்துகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான திட்ட குறிப்புகள் மேற்படி அணுஉலை அமைப்புகளில் தயாராக உள்ளது.

செய்ய வேண்டியது

1. பாதுகாப்பான பகுதியின் உள்ளேயே இருத்தல் வேண்டும்.
2. வானொலி மற்றும் தொலைகாட்சியின் உள்ளூர் நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் செய்திகளை கவனித்து நிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.
3. கதவு மற்றும் சன்னல்களை மூடி வைக்கப்பட வேண்டும்.
4. உணவு மற்றும் பயன்பாட்டுக்கான தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
5. வெளியிடங்களில் இருக்க நேரிட்டால் ஈரமான கைகுட்டை, துண்டு, வேட்டி அல்லது சேலையால் முகம் மற்றும் உடல் முழுவதுமாக மூடிக்கொண்டு வசிப்பிடம் கொண்டவுடன் அனைத்து உடைகளையும் அகற்றி நீராடி பின்னர் புதிய உடைகளை அணிய வேண்டும்.
6. மருத்துவ உதவி, வெளியேற்றம் போன்ற உள்ளூர் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
7. ஒவ்வொரு குடிமகனும் அணுகதிர் வீச்சு பேராபத்து குறித்து அறிந்திருக்க வேண்டும். அனுசக்தி வீச்சு பாதுகாப்பு குறித்து குடும்ப உறுப்பினர்கள் குழுந்தைகள் உட்பட புரிந்து கொள்ளும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும்.

செய்யக் கூடாதது

1. பீதி அடைதல் கூடாது
2. வீணாக பரப்பப்படும் வதந்திகளை நம்பக் கூடாது.
3. பேராபத்து காலங்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இடங்களில் உள்ளேயே இருத்தல் வேண்டும்.
4. வெளியூர்களில் இருந்தோ அல்லது வெட்ட வெளியில் கிடைக்க கூடிய உணவு பொருட்கள் குடிதண்ணீர் பிற உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உட்பட பயன்படுத்த கூடாது.
5. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடமைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் மூலம் எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது