பேரிடர் தணிப்புத் திட்டம்

பேரிடர் குறைப்புத் திட்டங்களின் முக்கிய நோக்கங்கள்:

சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து, அதனை மதிப்பிடுவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும், பேரழிவுகளிலிருந்து ஏற்படும் சேதங்களை குறைப்பதே மிக முக்கியமானதாகும்.

1. பேரழிவு ஆபத்துகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரித்து சமூகங்கள் வாழ மற்றும் வேலை செய்ய பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்துதல்.

2. பேரழிவுகளால் ஏற்படும் இழப்பு, உள்கட்டமைப்பு, பொருளாதார செலவுகள் மற்றும் அழிவு ஆகியவற்றின் சேதங்களை குறைத்தல்.

நிலவும் அபாயத்தையும், பாதிப்புணர்வையும் கருத்தில் கொண்டு, முன் வைக்கப்படவேண்டிய தடுப்பு நடவடிகக்கைகளை பின்வரும் ஏழு முக்கிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

1. இடர் அளவிடல்
2. கட்டுமானபணி
3. பழுது மற்றும் பராமரிப்பு
4. ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றம்
5. பயிற்சி மற்றும் செயற்திறன் பயிற்சிகள்
6. நில பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை
7. பேரிடர் குறைப்புக்கு தேவைப்படும் வள ஆதாரங்கள்

எவ்வாறு பாதிப்பு மற்றும் ஆபத்துகள் வேறுபட்டு இருகின்றதோ அவ்வாறே அதனை தாங்கும் சக்தியும், சமாளிக்க கூடிய திறனும் அமைகின்றது. அதனை போலவே பேரிடர் குறைப்பு உத்திமுறையை உள்ளூர்களில் விரைவாக கிடைக்க கூடிய வளங்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். பேரிடர் உத்திமுறைகளில் மக்களின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை மிகவும் முக்கியமானதாக கருத வேண்டும்.

நலிந்த சமூகத்தினர் மற்றும் குறைவான உள்கட்டமைப்பு கொண்ட கிராமப்புரங்களில் திடமான சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட பேரிடர் தணிப்பு யுக்திகளை கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

சமநிலை மற்றும் சமூக நீதிக்கு வழிவகுக்கும் அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களின் தொடர்ச்சியான மறு ஆய்வு, சிக்கலான முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு உறுதியளிக்கும்.

பயிற்சி, கல்வி மற்றும் தகவல் பரப்புதல் ஆகியவற்றின் பங்களிப்பு, பேரிடர் தணிப்பு உத்திகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய தலையீடு ஆகும்.

தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களின் உள்ளீடுகளுடன் மாநில நிர்வாகக் குழு, மாநில அளவில் அனைத்து பேரிடர் தணிப்பு நடவடிக்கையும் திட்டமிட்டு ஒருங்கிணைக்கின்றது. அனைத்து சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றின் தணிப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்து செயல்படுத்தப்படும். பேரிடர் துறைசார்ந்த முதன்மை அதிகாரிகள் பேரிடர் தணிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் துறை சார்ந்த அனைத்து முயற்சிகளை மதிப்பீடு செய்ய ஏதுவாக மாநில நிர்வாகக் குழுவிடம் அளிக்க வேண்டும்.