வேதியியல் மற்றும் தொழிற்சாலை பேரழிவு

வேதியியல் பேரழிவிற்கான அடிப்படை

வேதியியல் விபத்து கீழ்கண்ட செயல்பாடுகளின் போது உருவாகலாம்

  • தயாரிப்பு, கட்டுமானங்கள் உருவாக்குதல் நடைமுறை படுத்துதல் மற்றும் பணி மேற்கொள்ளுதல் பராமரித்தல் மற்றும் வெளியேற்றுதல்
  • தயாரிப்பு நிறுவனங்களில் மூலப்பொருட்களை கையாளும் பொழுது, உற்பத்தி மேற்கொள்ளப்படும் பகுதிகளில் அவைகளை சேமித்துவைத்து கையாளும் பொழுது தனிமையான பகுதிகள் சேமித்து வைக்கும் பொழுது தயாரிப்பு பொருட்கள் சேமிக்கப்படும் கிடங்கு, துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் சேமிப்பு மையம் மற்றும் எரிப்பொருள் நிரப்பும் நிலையம் ஆகியவற்றினை கையாளும் பொழுது.
  • சாலை, இரயில், வானம், நீர் மற்றும் குழாய் வழித்தடங்களில் கையாளும் பொழுது

அவசர நிலைகள் விபரம்

வேதியியல் பேராபத்து தொடர்பாக எந்தெந்த சூழலில் உள்ளது நிலைகளில் எவ்வாறு பேராபத்துகளை எதிர்கொள்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை முகமையால் சில அவசர நிலைகள் குறித்த விவரங்கள் வழிவகுக்கப்பட்டுள்ளன.

நிலை- 0

அவசர நிலைப்பாட்டிற்கு முந்தைய இயல்பு நிலை, இப்பொழுது எவ்விதமான பேராபத்துகளையும் எதிர்கொள்ளும் விதமாக ஒத்திகைகள், பயிற்சிகள் மற்றும் தயார் நிலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலை- 1

பேராபத்து நிகழ்விடத்திற்கு வெளிபுறமாக மற்றும் மாவட்ட நிருவாகத்தினால் கையாளக் கூடிய சக்திக்குட்பட்டவை.

நிலை- 2

பேராபத்துகள் மாநில அரசின் நிர்வாகத்தினால் கட்டுப்படுத்தக் கூடிய சக்திக்குட்பட்டவை.

நிலை- 3

தேசிய அளவிலான பேராபத்துக்கள் தேசிய அளவிலான அரசு நிர்வாக தலையீட்டிற்கு கீழ்வராமை.

வேதியியல் பேராபத்திற்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட வேண்டிய தற்காப்பு முறைகள்

1. பதற்றம் அல்லது பீதி ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அமைதியாகவும் விரைவாகவும் காற்றடிக்கும் திசைக்கு நேர் எதிராகவும் வரையறுக்கப்பட்ட வெளியேற்றும் வழிகளில் வெளியேற்றப்பட வேண்டும்.
2. வெளியேற்றப்படும் பொழுது ஈரத்துணி அல்லது சேலை முகப்பினால் முகத்தினை மூடிக்கொள்ள வேண்டும்.
3. வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திரனாளிகள், இயலாதவர்கள், நோயாளிகள் இன்னும் பிற மனிதர்களை நிகழ்விட உட்புறமுகமாகவே தனியாக அறையில் வைத்து கதவு மற்றும் சன்னல்களை நன்றாக மூடி வைத்துவிட வேண்டும்.
4. திறந்த நிலையில் உள்ள பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் உணவு மற்றும் தண்ணீரை அருந்தக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே அறுந்த வேண்டும்.
5. ஆபத்து பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு உடன் உடைமைகளை மாற்றிக் கொள்வதோடு கைகளை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்துக் கொள்ளவேண்டும்.
6. பாதுக்காப்பான பகுதியை சென்றடைந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புதுறை, காவல்துறை மற்றும் மருத்துவதுறைகளுக்கு முறையே தொலைபேசி எண்கள் 101, 100 மற்றும் 108 மூலமாக உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
7. தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பொதுஅறிவிப்பு அமைப்புகள், வானொலி, தொலைக்காட்சி, மாவட்டநிர்வாகம், தீயணைப்புத் துறை, காவல்துறை, மருத்துவத் துறை மற்றும் தொடர்புடைய பிறதுறை அல்லது நிர்வாக அறிக்கைகளை கவனித்து கேட்டு செயல்பட வேண்டும்
8. அரசு அலுவலர்களிடம் மிகச்சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
9. பொது இடங்களான பள்ளிக்கூடம், விற்பனை நிலைகள், கேளிக்கை நிலையங்களில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேராபத்து நிகழ்ந்திருப்பின் தெரியப்படுத்த வேண்டும்.
10. வதந்திகளை பரப்புவது மற்றும் கேட்டு ஏற்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

இயல்பான நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியவை

1. பேராபத்து நிகழும் என கணிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் புகைபிடிப்பது மற்றும் நெருப்புபற்ற வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்படக் கூடாது.
2. தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொழிற்சாலை குறித்தும் அதன் இயக்கம் குறித்தும் ஏற்படும் எதிர்பாராத விதமானஆபத்துகளை குறித்தும், தற்காப்பு குறித்தும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்
3. அவசரகால உபயோகத்திற்காக ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ள தொழிற்சாலை, அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மருத்துவமணை, கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் தொடர்பு எண்களை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
4. ஆபத்தான வேதியல் பொருட்களை தயாரிக்கும் அல்லது உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு அருகாமையில் வசிப்பிடங்கள் அமைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
5. அரசு, தனியார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினால் நடத்தப்படும் பொது மக்களுக்கான திறன் வளர் பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.
6. பொது மக்களுக்கான பேரிடர் மேலாண்மை திட்ட வரைவு தயார் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு பாதுகாப்பு மையங்கள் மற்றும் அதனை விரைவாக அநுகக் கூடிய அனுகு பாதைகள் ஆகியவற்றை நன்கு தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும்.
7. குடும்ப பேரிடர் மேலாண்மை திட்டம் ஒன்றை உருவாக்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
8. விரைவாக உருவாக்கும் வேதியியல் உற்பத்தி பொருட்கள் மற்றும் ஆபத்து நிறைந்த வேதிப் பொருட்கள் குறித்த விரிவான விவரங்கள் மற்றும் ஆபத்து காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகாமையில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
9. பேராபத்து காலங்களில் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக கிடைக்கப் பெறும் வகையில் வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. ஒவ்வொரு வசிப்பிடத்திலும் ஆபத்து காலத்திற்கு உதவும் வகையில் மருந்து பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் மிக முக்கிய பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.