ஆளில்லா வானூர்தி மூலம் வான்வழி புகைப்படவியல் ஆய்வு

தமிழகத்தில் ரூ.701.59 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான வான்வழி புகைப்படவியல் ஆய்வு ஆளில்லா வானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம், மாநிலத்தில் 10,000 சதுர கி.மீ. பரப்பளவிலான நீர்வழித்தடங்களில் புகைப்படங்கள் எடுக்க வான்வெளி ஆய்வு மையம், சென்னை தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடிலம், வெள்ளாறு, பெண்ணையாறு மற்றும் பரவனாறு ஆகிய 4 ஆற்றுப்படுகைகளில் 693 சதுர கி.மீ. பரப்பிலும், மதுரை மாவட்டத்தில் உள்ள குண்டாறு ஆற்றுப்படுகையில் 191 சதுர கி.மீ. பரப்பிலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 322 சதுர கி.மீ. பரப்பிலும் வான்வெளி அளவைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.