வளிமண்டல - நீரியல்

புயல்/கனமழை பாதிப்பு

வடகிழக்கு பருவகாலங்களில் சராசரியாக ஒன்று (அ) இரண்டு இம்மாநிலம் எதிர்கொள்கிறது. மேலும் வங்ககடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்தம் / தாழ்வுநிலை, எதிர்பாராத மழையினை உண்டாக்குகிறது. இந்த குறைந்த காற்றழுத்தம்/தாழ்வுநிலை குறைந்தது நான்கு நாட்கள் தொடர் மழையினை கொடுத்து, அதிக அளவில் வெள்ளத்தையும், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் தருகிறது.

வெள்ள பாதிப்பு

பொதுவாக கனமழை மற்றும் புயலின் காரணமாக தமிழகம் வெள்ள அபாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சராசரியாக வருடத்திற்க 5000-த்திற்கு மேற்பட்ட வீடுகள் மழை, புயல் காரணமாக சேதமைடந்துள்ளன.

1997-லிருந்து 2005 வருடம் வரையுள்ள காலங்களில் பெரிய அளவில் புயல் ஏதும் தாக்காத நிலையிலும் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராபள்ளியில் போன்ற இடங்களில் பெருமளவு வெள்ள அபாயம் ஏற்பட்டது.

நிலச்சரிவு / சகதி ஓட்டம்

பருவகால மழை காலங்களில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும், இதற்கு உதாரணமாக ரன்னிமேடு நிலச்சரிவு, கிளென்மோர் நிலச்சரிவு, குன்னூர் நிலச்சரிவு, கரடி பள்ளம் நிலச்சரிவு மற்றும் மரப்பாலம் நிலச்சரிவு போன்றவற்றை கூறலாம். நீலகிரி நீங்கலாக சேலம், ஈரோடு, கோயம்பத்தூர், வேலூர் மற்றும் திண்டுக்கல், கொடைக்கானல் மலை போன்ற இடங்களும் நிலச்சரிவை எதிர்கொண்டு வருகின்றன.

வறட்சி பாதிப்பு

குறைந்த மழைப்பொழிவு மற்றும் பருவ மழை பொய்ப்பு காரணமாக தமிழகம் வறட்சி பாதிக்கக்கூடிய மாநிலமாக உள்ளது. வறட்சியானது உணவு உற்பத்தியிலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வறட்சி நிலவும் தர்மபுரி, மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வறட்சியால் பாதிக்கக்கூடிய மாவட்டங்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடிய வறட்சியால் தமிழ்நாடு வேளாண்மை பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.