பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இடி மின்னல் தாக்கும்போது குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது மற்றும் மற்றும் நீர்நிலைகளில் குளிக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள் பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் , எ ரிவாயு , மண்ணெண்ணெய் , மருந்து , பேட்டரிகள் , டார்ச்கள் , முகக்கவசங்கள் .

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை, சென்னை-5